கடந்த 2022 ஆம் ஆண்டு வெப்பமான ஆண்டாக இருந்ததால், உலகத்தில் கடல்மட்டம் உயரும் வேகம் இரட்டிப்பாகியுள்ளதாக ஐ.நா காலநிலை அறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து ஐந்தாவது அல்லது ஆறாவது வெப்பமான ஆண்டாக கடந்த 2022 ஆம் ஆண்டு அமைந்ததால், சராசரியை விட சராசரியாக 1.15 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகமாக இருந்ததாகவும், இது கடந்த 8 ஆண்டுகளில் உலகளவில் பதிவாகிய மிகவும் வெப்பமான ஆண்டு என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
உலகளாவிய கடல் வெப்பம் மற்றும் அமிலத்தன்மை உச்ச அளவை எட்டியுள்ளன என்றும், அண்டார்டிக் கடல் பனி மற்றும் ஐரோப்பிய ஆல்ப்ஸ் பனிப்பாறைகள் இதுவரை இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளன எனவும் ஐ.நா. அறிக்கை கவலை தெரிவித்துள்ளது.