கனடா நாடாளுமன்றத்தில் ஆண் எம்.பிக்கள் பிங்க் நிற ஹை ஹீல்ஸ் அணிந்துவரும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கனடாவில் பெண்கள் தங்குமிடத்திற்கு நிதியை திரட்டுவது, பாலின அடிப்படையில் வன்முறை குறித்து ஆண்களும், சிறுவர்களும் அறிந்து கொள்வதை நோக்கமாக கொண்டு கடந்த 4 ஆண்டுகளாக ''ஹோப் இன் ஹை ஹீல்ஸ்'' பிரசாரம் நடத்தப்பட்டு வருகிறது.
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியாக ஆண் எம்.பிக்கள் பிங்க் நிறத்தில் கட் ஷூ அணிந்து பிரசாரத்தை மேற்கொண்டனர்.