உக்ரைனில் உடலில் கவசம் அணிந்தபடி, கையில் மெட்டல் டிடெக்டர்களை வைத்து சோதனை செய்து கொண்டே விவசாயப் பணிகளில் ஈடுபடும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் ஓராண்டை கடந்து விட்ட நிலையில், அங்கு விவசாயம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. போரின் போது வீசப்பட்ட வெடிகுண்டுகள் மற்றும் ஏவுகணைகளின் எச்சங்கள் விவசாய நிலங்களில் சிதறிக் கிடக்கின்றன.
அவற்றை அகற்றிவிட்டு நிலத்தை உழுது, சமன்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. அதுபோன்ற சமயங்களில் வெடிக்காமல் போன குண்டுகள் வெடித்துச் சிதறும் வாய்ப்புகள் இருப்பதாலும் சண்டை தொடர்ந்து நடப்பதால் பாதுகாப்பு கருதியும் விவசாயிகள் கவச உடைகளை அணிய கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர்.