ஈராக், சிரியா, லெபனான் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கும் இஸ்லாமியர்கள் இன்று ரமலான் பண்டிகையை கொண்டாடுகின்றனர்.
இஸ்லாமிய நாட்காட்டியின் 9வது மாதமான ரமலான் மாதத்தை ஒட்டி, இஸ்லாமியர்கள் 30 நாட்கள் நோன்பு கடைபிடித்த நிலையில், மத்திய கிழக்கு நாடுகளில் பிறை தெரிந்ததால் ரமலான் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பல்வேறு நாடுகளின் தலைநகரில் உள்ள மசூதிகளில் குவிந்த இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
பின்பு, ஒருவருக்கொருவர் பண்டிகை வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.