புராதன சின்னங்களை சேதப்படுத்தும் சுற்றுலா பயணிகளுக்கு 54 லட்ச ரூபாய் வரை அபராதம் விதிக்கும் சட்ட மசோதா இத்தாலி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டங்களின்போது சேதப்படுத்தப்படும் நினைவுச்சின்னங்களை சீரமைக்க இத்தாலி அரசு பல கோடி ரூபாய் செலவழித்துவருகிறது. கடந்தாண்டு உலகப்புகழ் பெற்ற ஸ்பானிஷ் படிகள் மீது, அமெரிக்க நாட்டு சுற்றுலா பயணிகள் இருவர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஓட்டினர். சேதமடைந்த 2 பளிங்கு படிக்கட்டுகள் 21 லட்ச ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்டது.
அவர்களுக்கு 35,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், இனிவரும் நாட்களில் புராதன சின்னங்களை சேதப்படுத்துவோருக்கு 9 லட்ச ரூபாய் முதல் 54 லட்ச ரூபாய் வரை அபராதம் விதிக்கும் சட்டம் இயற்றப்பட உள்ளது.