உலகில் முதல்முறையாக, காற்றின் தரத்தை கண்காணிக்கும் கருவி பொருத்தப்பட்ட செயற்கைகோளை அமெரிக்காவின் நாசா நிறுவனமும், எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமும் இணைந்து விண்ணில் ஏவியுள்ளன.
கனடாவிலிருந்து மெக்சிகோ வரை, கிட்டத்திட்ட வட அமெரிக்க கண்டம் முழுவதும் காற்று மாசு அளவை மிகத் துல்லியமாக HI RESOLUTION-ல் கணக்கிடக்கூடிய கருவியை Ball Aerospace நிறுவனம் வடிவமைத்துள்ளது. மணிக்கு ஒரு முறை என்ற அடிப்படையில், காற்று மாசை கணக்கிடும் இந்த கருவிக்கு TEMPO என பெயரிடப்பட்டுள்ளது.
ஒரு டிஷ் வாஷர் அளவிலே ஆன அந்த கருவி Intelsat 40E என்ற செயற்கைகோளில் பொருத்தப்பட்டு, எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது.