நெதர்லாந்து நாட்டில் தண்டவாளத்தின் அருகே பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட்டிருந்த கிரேன் இயந்திரம் மீது பயணிகள் ரயில் மோதி தடம்புரண்டு விபத்திற்குள்ளானது.
தி ஹேக் நகருக்கு அருகே அதிகாலையில் சுமார் 50 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த ரயில், கிரேன் இயந்திரத்தில் வேகமாக மோதி தடம்புரண்டது.
இதில் கிரேன் ஆபரேட்டர் உயிரிழந்த நிலையில், ரயில் ஓட்டுநர் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனையடுத்து, நெதர்லாந்தின் பரபரப்பான ரயில் பாதைகளில் ஒன்றான லெய்டன் - தி ஹேக் வழித்தடத்தில் உள்ளூர் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளன.