ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் 6.9 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரஷ்யாவின் கிழக்கு பசிபிக் கடற்கரை பகுதியில் கம்சட்கா பிராந்தியத்திற்கு தெற்கே 44 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், தரைப்பகுதியில் இருந்து 100 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக ரஷ்யாவின் அவசர கால அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் பீதியடைந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு இருப்பிடங்களை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர்.