இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், தனி விமானத்தில் பயணிக்க, பத்தே நாட்களில், நான்கரை கோடி ரூபாய் செலவிடப்பட்டதாக எதிர்க்கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
கடந்த நவம்பர் மாதம், எகிப்தில் நடைபெற்ற காலநிலை மாற்ற மாநாட்டிலும், இந்தோனேஷியாவில் நடைபெற்ற ஜி-20 உச்சி மாநாட்டிலும் பங்கேற்க ரிஷி சுனக் தனி விமானத்தில் பயணித்துள்ளார்.
அதை தொடர்ந்து லாட்வியாவிற்கும், எஸ்டோனியாவிற்கும் அவர் தனி விமானத்திலேயே சென்றுள்ளார். விலைவாசி உயர்வால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ரிஷி சுனக் தனி விமானத்தில் பயணிக்க, நான்கரை கோடி ரூபாய் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டதாக, எதிர்கட்சியினர் விமர்சித்துவருகின்றனர்.