பாகிஸ்தானில் விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள், அரசு சார்பில் வழங்கப்படும் இலவச கோதுமை மாவை வாங்க திரண்டனர்.
அந்நாட்டில் பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையில், அத்தியாவசிய பொருட்களின் விலை 45 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இந்நிலையில், பாகிஸ்தான் அரசு ரமலான் மாதத்தில் மக்களுக்கு இலவசமாக மாவு விநியோகிக்கும் திட்டத்தை தொடங்கி செயல்படுத்தி வருகிறது.
கடந்த சில நாட்களில், இலவச உணவு பொருட்களை வாங்கத் திரண்ட கூட்ட நெரிசலில் சிக்கி 16 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.