தாய்லாந்தில் உள்ள தேசியப் பூங்காவில் ஏற்பட்ட பெரு நெருப்பில் ஏராளமான விலங்குகள் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
காவ் லாம் தேசியப்பூங்காவில் ஏற்பட்ட நெருப்பு நகோன் நயோக் என்ற செங்குத்து மலையில் பிளம்பாக மாறி எரிந்தது.
மின்னல் மற்றும் பலத்த காற்றினால் தீ பரவியிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தீயை அணைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ள நிலையில் மக்களுக்கு பாதிப்பில்லை என்றும், வனப்பகுதியில் உள்ள விலங்குகள் பாதிக்கப்படலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.