பாகிஸ்தானில், கோதுமை மாவு ஏற்றிச்சென்ற லாரியை நூற்றுக்கணக்கானோர் முற்றுகையிட்டு மாவு மூட்டைகளை சூறையாடியனர். கடும் பொருளாதார நெருக்கடி நிலவுவதால் அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது.
ரமலான் மாதத்தையொட்டி பாகிஸ்தானிலுள்ள பஞ்சாப் மாகாணத்தில் வசிக்கும் ஏழை குடும்பங்களுக்கு தலா 10 கிலோ கோதுமை மாவு இலவசமாக வழங்க அந்நாட்டு அரசு உத்தரவிட்டது.
கோதுமை மாவு மூட்டைகளுடன், பெஷாவர் நகரம் வழியாக சென்ற லாரியை விரட்டி சென்று பிடித்த பொதுமக்கள், லாரி மீது முண்டியடித்து ஏறி அனைத்து மூட்டைகளையும் திருடி சென்றனர்.
இலவச கோதுமை மாவை பெற முயன்றபோது நேர்ந்த தள்ளு முள்ளுவில் இதுவரை 4 முதியர்வகள் உயிரிழந்துள்ளனர்.