செவ்வாய் கிரகத்தில் வீடு கட்ட உருளைக்கிழங்கு பயன்படும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், செவ்வாய் கிரகத்தில் கட்டமைப்புகளை உருவாக்கப் பயன்படும் ஸ்டார்க்ரீட் என்ற உருளைக்கிழங்கை அடிப்படையாக கொண்டு கலவையை உருவாக்கியுள்ளனர்.
இதனுடன் விண்வெளித் தூசு, உப்பு மற்றும் உருளைக்கிழங்கின் மாவுச்சத்து போன்ற பொருட்களை இணைத்து வீடு கட்ட முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இந்தக் கலவை 32 மெகாபாஸ்கல்ஸ் என்ற அளவைக் கொண்ட வலிமையுடன் இருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.