சீனாவுடன் எந்த ராணுவக் கூட்டணியும் உருவாக்கவில்லை என ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அரசு தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், ராணுவ ஒத்துழைப்பில் இரு நாடுகளும் மறைக்க எதுவும் இல்லை என்றார்.
ராணுவ-தொழில்நுட்ப தொடர்புத் துறையில் இருநாடுகளும் ஒத்துழைப்பைக் கொண்டுள்ளன எனக் குறிப்பிட்டார். சீனா மட்டுமின்றி மேலும் பல நாடுகளுடன் ராணுவ பயிற்சி நடத்துவதையும் புதின் மேற்கோள் காட்டினார்.
மேலும் ரஷ்யா எந்த நாட்டையும் அச்சுறுத்தவில்லை என்று கூறிய புதின், 2ம் உலகப் போரின் போது இத்தாலி, ஜெர்மனி மற்றும் ஜப்பான் நாடுகள் உருவாக்கியதைப் போல புதிய கூட்டணியை நேட்டோ அமைப்பு கட்டமைக்க தொடங்கி இருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.