இங்கிலாந்து அரசு அலுவலக செல்போன்களில் டிக் டாக் செயலிகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக அமெரிக்கா, கனடா மற்றும் பெல்ஜியம் உள்ளிட்ட சில ஐரோப்பியநாடுகள் டிக்டாக் செயலிக்கு தடை விதித்திருந்த நிலையில், இங்கிலாந்து அரசின் முக்கிய தகவல்களின் பாதுகாப்பு அம்சங்களுக்கே முன்னுரிமை என்றும் அரசு அலுவலகங்களில் அரசுக்கு சொந்தமான கணினி, தொலைபேசிகள் உள்ளிட்ட மின்னணு சாதனங்களில் சீன வீடியோ பகிர்வு செயலியான டிக்டாக் பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாகவும் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.
தங்கள் சொந்த தொலைபேசிகளில் டிக்டாக் செயலியை பயன்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.