நீருக்கு அடியில் அணுசக்தி தாக்குதல் நடத்தும் ட்ரோனை பரிசோதனை செய்து இருப்பதாக வட கொரியாவின் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
நீருக்குள் கதிரியக்கத்தை ஏற்படுத்தும் விதமாக வடிவமைக்கப்பட்ட இந்த ட்ரோன், வரம்பற்ற அணுசக்திப் போரில் எச்சரிக்கையுடன் செயல்படும் என அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்ததாகக் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்கா- தென் கொரியப் படைகள் கடல் எல்லையில் கூட்டாகப் பயிற்சியில் ஈடுபட்டுவரும் நிலையில் வட கொரியா நீருக்குள் சென்று அணுசக்தி தாக்குதல் நடத்தும் ட்ரோனை பரிசோதனை செய்து இருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.