மாஸ்கோ சென்றிருந்த சீன அதிபர் ஷி ஜின் பிங் அங்கிருந்து புறப்பட்ட நிலையில், உக்ரைன் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலில் ரஷ்யா ஈடுபட்டது.
தலைநகர் கீவுக்கு தெற்கே உள்ள நகரான ரிஷிசிவ்-ல் உள்ள கல்லூரி தங்கும் விடுதிகளில் ஆளில்லா விமானங்கள் நடத்திய தாக்குதலில் 6 பேர் பலியானதுடன் 18 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலில் கல்லூரி விடுதியின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.
சபோரிஜியாவில் குடியிருப்பு பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் பலியானார். 33 பேர் காயமடைந்தனர்.. இரவு நேரத்தில் ரஷ்யா நடத்திய இந்த தாக்குதலின்போது பெரும்பாலான இடங்களில் சைரன்கள் ஒலித்தன.
இதனிடையே, தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ஈரானில் தயாரிக்கப்பட்ட 21 ட்ரோன்களில் 16 ஐ சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் அறிவித்துள்ளது.