அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், கல்வித்துறை ஊழியர்கள் 3 நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால், அனைத்து வகுப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஊதிய உயர்வு தொடர்பாக ஓராண்டுக்கு மேலாக நடைபெற்றுவந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததைது. இதையடுத்து, வகுப்பறை உதவியாளர்கள், பள்ளி பேருந்து ஓட்டுநர்கள் போன்ற கல்வித்துறை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு, பேரணி சென்றனர்.
அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வராததால், 4 லட்சத்து 20,000 மாணவர்களுக்கு வகுப்புகள் ரத்து செய்யப்பட்டன.