உக்ரைனில் ரஷ்ய படையெடுப்பு துவங்கி ஓராண்டு நிறைவுற்ற நிலையில், ரஷ்யாவிற்கு எதிரான போரில் உயிர் தியாகம் செய்த உக்ரைன் வீரர்களுக்கு அதிபர் ஜெலன்ஸ்கி அஞ்சலி செலுத்தினார்.
போரில் திருப்புமுனையாக கருதப்படும் மோஷ்சுனில் குழுமியிருந்த ராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றிய ஜெலன்ஸ்கி, போரில் ஈடுபட்டுள்ள உக்ரைனிய வீரர்களைப் பாராட்டினார்.
புதிதாக அமைக்கப்பட்ட நினைவிடத்தில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு விருதுகளையும் அவர் வழங்கினார்.