ஈக்வடாரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட போது, குயாகில் நகரில் உள்ள பல்பொருள் அங்காடியில் இருந்த வாடிக்கையாளர்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்த வீடியோ வெளியாகியுள்ளது.
எல் ஓரோ மாகாணத்தில் சனிக்கிழமை 6.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அடுத்த ஒரு மணி நேரத்தில் மீண்டும் இரு முறை நில அதிர்வுகள் ஏற்பட்டதில், சில கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.
இடிபாடுகளில் சிக்கி 14 பேர் உயிரிழந்ததாகவும், 380க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் ஈக்வடாரின் புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.