கிரீஸ் தலைநகர் ஏதென்ஸ் குப்பை தொட்டியின் கீழ் கண்டெடுக்கப்பட்ட வெள்ளை நிற புலிக்குட்டியை காப்பாற்றும் முயற்சியில் கால்நடை மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
பிறந்து 3 மாதமான புலிக்குட்டி கடந்த மாதம் 28-ம் தேதி அட்டிகா உயிரியல் பூங்காவின் வாகன நிறுத்துமிடத்தில் உள்ள குப்பைத் தொட்டியின் கீழ், துப்புறவு தொழிலாளியால் கண்டெடுக்கப்பட்டது.
உடல் மெலிந்தும், நீர்ச்சத்து குறைவாகவும் இருந்த புலிக்குட்டி ஆபத்தான நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. எக்ஸ் ரே பரிசோதனையில் பின் கால் ஒன்றில் உலோக முள் வைக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.
புலி உயிர் பிழைத்தால், சரணாலயத்திற்கு மாற்ற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.