கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டினருக்கான விசா விநியோகத்தை 3 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தொடங்க உள்ளதாக சீன அரசு அறிவித்துள்ளது.
சீனாவில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சுற்றுலா மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில், நாளை முதல் அனைத்து வகையான விசாக்களும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2020ம் ஆண்டு மார்ச் 28ம் தேதிக்கு முன் விநியோகிக்கப்பட்ட விசாக்கள் செல்லுபடியாகும் என்றும் ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வருவோருக்கு விசா இல்லாத பயணத்தை மீண்டும் தொடங்க அனுமதிப்பதாகவும் சீனா அரசு தெரிவித்துள்ளது.