கடல் மட்டம் உயர்வதால் ஆசியாவில் உள்ள பெரு நகரங்கள் முன்பு கருதப்பட்டதை விட அதிக ஆபத்தில் இருப்பதாக ஆராய்ச்சியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடல் வெப்பம் அதிகரித்து, பருவநிலை மாற்றத்தால் பனிப்பாறை உருகி வருவதால் 2100ம் ஆண்டு வாக்கில், ஆசியாவின் சில முக்கிய நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கக்கூடும் என்று காலநிலை குறித்த இதழான நேச்சர் தெரிவித்துள்ளது.
வெள்ள பாதிப்பு காரணமாக 5 கோடி மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும், அதில் 3 கோடிப் பேர் இந்தியாவில் வசிப்பதாகவும் நேச்சர் இதழில் கூறப்பட்டுள்ளது.