செவ்வாய் கிரகத்தில் சூரியன் மறையும் அந்திமக் காட்சியை நாசாவின் கியூரியாசிட்டி ரோவர் படம் பிடித்துள்ளது.
கடந்த 2012ம் ஆண்டு செலுத்தப்பட்ட ரோவர் விண்கலம் இதுவரை ஏராளமான புகைப்படங்களை அனுப்பி உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது.
அதில் செவ்வாய் கிரகத்தில் சூரியன் மறையும்போது அது மேகங்களை அதிகப் பிரகாசமாக ஒளிரச் செய்யும் என்று கூறப்பட்டுள்ளது. செவ்வாயின் மேல் உள்ள மேகங்கள் வழக்கத்தை விட குறைவான உயரத்தில் இருப்பவை.
மேலும் அவற்றில் கார்பன் டை ஆக்ஸைடு அல்லது உலர் பனி அதிகமாக இருக்கும். இதன் காரணமாக ஒளிரும் தன்மை அதிகமாக இருப்பதாக நாசா தெரிவித்துள்ளது.