மேற்கு ஆப்பிரிக்க நாடான பர்கினோ பாஸோவில் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் 12 பேர் கொல்லப்பட்டனர்.
தலைநகர் உவாகிகவ்யாவிற்கு வடக்குப் பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில் புகுந்த துப்பாக்கி ஏந்திய நபர்கள், சிறுவர்களை குறிவைத்து கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் 7 சிறுவர்கள் உள்பட 12 பேர் கொல்லப்பட்டனர்.