9 ஆண்டுகளுக்கு முன் மர்மமான முறையில் மாயமான மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தை மீண்டும் தேடுவதற்கு அனுமதிக்குமாறு காணாமல் போனவர்களின் குடும்பத்தினர் மலேசிய அரசை கேட்டுக் கொண்டுள்ளனர்.
கடந்த 2014ம் ஆண்டு கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங் சென்ற MH370 என்ற விமானம் திடீரென மாயமானது. மலேசியா, சீனா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் நடத்திய தேடுதல் வேட்டையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இந்த நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த ஓஷன் இன்ஃபினிட்டி என்ற நிறுவனமும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது. தற்போது நடப்பு கோடையில் புதிய தேடலைத் தொடங்க ஓஷன் இன்ஃபினிட்டி நிறுவனத்தை அனுமதிக்க வேண்டும் என்று விமானத்தில் பயணம் செய்தவர்களின் உறவினர்கள் மலேசிய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.