அண்டார்டிகா கண்டத்தில் உள்ள பனிப்பாறைகள் முந்தைய கோடை காலங்களுடன் ஒப்பிடுகையில் தற்போது வேகமாக உருகி வருவது, செயற்கைக்கோள் படங்கள் மூலம் தெரியவந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
2014 முதல் 2021 வரையிலான காலப்பகுதியில், 10,000-க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள் படங்களை விஞ்ஞானிகள் ஆய்வு செய்ததில், முந்தைய கோடை காலங்களைக் காட்டிலும், 22 சதவீதம் வேகமாக பனிப்பாறைகள் உருகிவருவது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த வேகமாக மாற்றம், கடல்நீர் மட்ட உயர்வுக்கு வித்திடும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
பனிப்பாறைகள் உருகுவதால், கடந்த 1992 முதல் 2017 வரையிலான காலப் பகுதியில் மட்டும் 7.6 மில்லி மீட்டர் கடல்நீர் மட்டம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.