சீனாவின் வூகானில் உள்ள நுண்கிருமிகள் ஆய்வகத்தில் ஏற்பட்ட கசிவால் தான் கொரோனா பரவியதாக அமெரிக்காவின் புலன் விசாரணை அமைப்பான எப்பிஐ தெரிவித்துள்ளது.
உலகையே சுமார் 2 ஆண்டுகள் முடக்கிய கொரோனா நோய் தொற்றுக்கான ஆரம்பப் புள்ளியாக சீனாவே இருந்ததாக எப்பிஐ இயக்குநர் கிறிஸ்டோபர் வ்ரே தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
வூகான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி வளாகங்கள், நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான சீன மையம் மற்றும் தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் வூகான் இன்ஸ்டிடியூட் ஆப் உயிரியல் தயாரிப்பு ஆய்வகத்திலிருந்தே வைரஸ் பரவியிருக்கலாம் என்று எப்பிஐ தெரிவித்துள்ளது.