தென்அமெரிக்கா நாடான பெருவில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய 30 கல்லறைகளை தொல்லியல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
வட-மத்திய ஹுரல் பள்ளத்தாக்கில் உள்ள மக்காடன் மலையில், சாண்டாய் கலாச்சாரத்தைச் சேர்ந்த கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவித்த தொல்லியல் துறையினர், கல்லறைகளிலிருந்து எடுக்கப்பட்ட மனித எலும்புகள் மற்றும் பாத்திரங்கள் கி.பி ஆயிரம் முதல் ஆயிரத்து 440ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்டவை என்று தெரிவித்துள்ளனர்.