சிலி நாட்டைச் சேர்ந்த நீச்சல் வீராங்கனை ஒருவர் நீச்சலில் புதிய சாதனை படைத்துள்ளார்.
Barbara Hernandez என்ற அந்த வீராங்கனை அண்டார்டிக் கடல் பகுதியில் 2டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் இரண்டரை கிலோ மீட்டர் தூரம் நீந்தி கடந்த முதல் நபர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
அவர் கடலில் நீந்தும் போது அவருக்குத் துணையாக இரு படகுகளில் மீட்பு வீரர்களும் உடன் சென்றனர்.