நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கி நாட்டுக்கு மேலும் 100 மில்லியன் டாலர் உதவி வழங்கப்படும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.
நிலநடுக்கத்தால் பேரிழப்பை சந்தித்துள்ள துருக்கிக்கு 85 மில்லியன் டாலர் உள்ளிட்ட உதவிகளை அமெரிக்கா ஏற்கெனவே செய்தது. இந்நிலையில் துருக்கியில் பயணம் மேற்கொண்ட பிளிங்கன், ஹெலிகாப்டரில் சென்று நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், துருக்கியை போல நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட இன்னொரு நாடான சிரியாவுக்கு உதவி செய்வதில் சில தடைகள் இருப்பதாகவும், எனினும் மனிதாபிமான அடிப்படையிலான இந்த விவகாரத்துக்கு அந்த தடைகள் பொருந்தாது என்றும் கூறினார்.