வடகொரியா இன்று கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
வாஷிங்டனில் அமெரிக்காவுடன் இணைந்து தென்கொரியா அடுத்த வாரம் கூட்டுப்பயிற்சி மேற்கொள்ள உள்ள நிலையில், இதற்கு பதிலடியாக வடகொரியா நேற்று பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை நடத்தியதாக தென்கொரியா தெரிவித்தது.
இந்நிலையில் இன்று கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை நடைபெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஏவுகணையை தென் கொரிய ராணுவமும் உறுதிப்படுத்திய நிலையில், தங்கள் பொருளாதார மண்டலத்தில் 66 நிமிடங்கள் பறந்து சென்றதாக ஜப்பானும் தெரிவித்துள்ளது.