பாகிஸ்தான் கராச்சி நகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகுந்த தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 4 போலீசார் கொல்லப்பட்டனர். மேலும் 11 போலீசார் காயம் அடைந்தனர்.
ஏராளமான போலீசாரை சிறைப்பிடித்த தீவிரவாதிகள் 5 மாடிகள் கொண்ட காவல்துறை தலைமையகத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். அங்கு குண்டுவெடிப்பும் நடந்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து பின்னிரவில் பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நீண்ட நேரமாக கடுமையான துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
அதில் மூன்று பேர் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தி உயிரிழந்தனர். இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலுக்கு தாலிபன் இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.