பெரு நாட்டின் பாலைவனத்தில் 7 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய திமிங்கல மண்டை ஓடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பெருவை சேர்ந்த பழங்கால ஆராய்ச்சியாளர்கள் குழு, ஒகுகேஜே பாலைவனத்தில் இதனை கண்டுபிடித்தனர். திமிங்கலத்தின் இந்த மண்டை ஓடு 7 மில்லியன் ஆண்டுகளாக பாலைவனப் பகுதியில் இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
மண்டை ஓட்டின் நீளம் 4.3 அடி எனவும், திமிங்கலம் 16 முதல் 18 அடி வரை இருந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. திமிங்கலத்தின் மண்டை ஓடு லிமாவின் தேசிய வரலாற்று அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.