அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் வீசிய மணற்புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
சுழன்றடித்த புழுதி புயலால் சாலைகள், வீதிகளில் சென்று கொண்டிருந்தவர்கள் மீது மண், தூசி சூழ்ந்தது. இதையடுத்து, ஆங்காங்கே போக்குவரத்து முடங்கியது.
புயலால், வாகனங்கள் அடித்துச் சென்று விபத்தை ஏற்படுத்துமென்ற அச்சத்தால், நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் மெதுவாக இயக்கப்பட்டன.