பாலைவன தேசமான ஐக்கிய அரபு அமீரகத்தில், அதிநவீன வேளாண் தொழில்நுட்பங்கள் மூலம் சுமார் ஆயிரம் ஏக்கர் நிலத்தில் கோதுமை சாகுபடி செய்யப்படுகிறது.
90 சதவீத உணவு பொருட்கள் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதால், உள்நாட்டு வேளாண் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்ட ஐக்கிய அரபு அமீரக அரசாங்கம், ஷார்ஜாவின் மலேஹா நகரில் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில், பாரம்பரிய கோதுமை ரகங்களை சாகுபடி செய்துவருகிறது.
அதிநவீன தொழில்நுட்பங்கள் மூலம் பாசனத் தேவை மற்றும் பயிர்களின் வளர்ச்சியை துல்லியமாக கணக்கிட்டு, இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்தி வேளாண்மை செய்யப்படுகிறது.
உப்புத்தன்மை அகற்றப்பட்ட கடல்நீரை பயன்படுத்தி, ஆண்டுக்கு 1600 டன் கோதுமை மகசூல் செய்யப்படுகிறது.