விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் குறித்து பழ.நெடுமாறன் தெரிவித்துள்ள கருத்தை முற்றிலும் புறம் தள்ளிவிட முடியாது என தமிழ்த்தேசியக்கட்சியின் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் செய்தியாளர் களிடம் பேசிய அவர்,2009-ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற பேரணி உள்ளிட்ட பல நேரங்களில், பிரபாகரனின் உடல் டி.என்.ஏ ஆய்வு செய்யப்பட்டு அவரது உடல்தான் என நிரூபிக்க முடியுமா என கேள்வி எழுப்பி இருந்ததாகவும் அதற்கு இதுவரை உரிய பதில் கிடைக்கவில்லை என்றும் கூறினார்.