அமெரிக்காவில் வசித்துவரும் பாகிஸ்தான் நாட்டு தொழிலதிபர் ஒருவர், துருக்கி, சிரியாவில் நிலநடுக்க நிவாரண பணிகளுக்காக சுமார் 248 கோடி ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார்.
அந்த நபரின் மனித நேயத்தை பாராட்டி பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.
பாகிஸ்தான் அரசாங்கம் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில் அவர் ஏன் துருக்கிக்கு உதவினார் என கேள்வி எழுப்பியும், ஷெபாஸ் ஷெரீப் போன்ற ஊழல்வாதிகள் ஆட்சியில் இருப்பதால் தான் அவர் பாகிஸ்தானுக்கு உதவ முன்வரவில்லை எனவும் அந்நாட்டு மக்கள் பதிலுக்கு பதிவிட்டுள்ளனர்.