வியட்நாமில் 80 வயது முதியவரொருவர் 60 ஆண்டுகளாகத் தூங்காமல் வாழ்ந்து வருவதாகத் தெரியவந்துள்ளது.
1962-ஆம் ஆண்டில் இருந்தே தாய் நகோக் என்ற முதியவர், தூங்காமல் உயிர் வாழ்ந்து வருகிறார். இவரை பற்றி அறிந்த யூடியூப் சேனல் ஒன்று, வியட்நாமுக்கு சென்று அவருடன் செலவிட்டு அவரது அன்றாட நடவடிக்கைகளை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளது.
அவரது மனைவி, குழந்தைகள், நண்பர்கள், அக்கம்பக்கத்தினர் எவருமே இத்தனை ஆண்டுகளில் நகோக் உறங்கியதை கண்டது இல்லை என்று தெரிவித்திருக்கிறார்கள். 20 வயதில் ஏற்பட்ட காய்ச்சல் ஏற்பட்டதாகவும் அதன்பின் தூக்கமின்றி இருப்பதாகவும் தாய் நகோக் தெரிவித்தார்.