சீன உளவு பலூன் அமெரிக்காவில் பறந்தது தொடர்பாக, சீனாவை சேர்ந்த 6 நிறுவனங்களை அமெரிக்கா பிளாக் லிஸ்ட்டில் சேர்த்துள்ளது.
தங்கள் வான்வெளியில் பறந்த சீன உளவு பலூனை அமெரிக்கா கடந்த வாரம் சுட்டு வீழ்த்தியநிலையில், தற்போது சீனாவை சேர்ந்த 5 நிறுவனங்கள் மற்றும் ஒரு ஆராய்ச்சி நிறுவனத்தை அமெரிக்கா பிளாக் லிஸ்ட்டில் சேர்த்துள்ளது.
நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு தீங்கு விளைவிக்கும் நிறுவனங்கள், அமெரிக்க தொழில்நுட்பங்களை பெறுவதில் இருந்து துண்டிக்கப்படும் என்பதை இந்த நடவடிக்கை காட்டுவதாக தொழில்துறை மற்றும் பாதுகாப்புக்கான வர்த்தகத்தின் துணைச் செயலாளர் ஆலன் எஸ்டீவ்ஸ் தெரிவித்தார்.