அலாஸ்கா மீது 24 மணி நேரமாக வட்டமிட்டு வந்த இரண்டாவது உளவு சாதனம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
ராணுவ மையத்தை உளவுப் பார்க்க வந்ததாகக் கூறப்படும் சீனாவின் உளவு பலூனை போர் விமானம் மூலமாக அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது.
இந்நிலையில் மற்றொரு பலூன் லத்தீன் அமெரிக்கா அருகில் வட்டமிட்டு வருவதாக தகவல் வெளியானதால் அதையும் சுட்டு வீழ்த்துமாறு அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டார்.
இதனையடுத்து 24 மணி நேரமாக அலாஸ்கா மீது வட்டமிட்டு உள்நாட்டு விமானப் போக்குவரத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தி வந்த ஒரு சாதனம் சுட்டுவீழ்த்தப்பட்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.