செயற்கை நுண்ணறிவு தேடுபொறியான கூகுள் பார்டு அறிமுக நிகழ்ச்சியில் தவறான தகவல் வெளியிட்டதன் எதிரொலியால் கூகுளின் தாய் நிறுவனமான அல்பாபெட்-டின் பங்குகள் மதிப்பு ஒரே நாளில் 8 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு சரிந்தது.
மைக்ரோசாப்டின் சாட்ஜிபிடி-க்கு போட்டியாக புதிதாக பார்டு என்ற உரையாடலுக்கான செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தை கூகுள் நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்தியது.
பார்டு செயலி குறித்து கூகுள் நிறுவனம் ட்விட்டரில் GIF ஒன்றைப் பதிவிட்டிருந்தது. அதில், ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட புதிய கண்டுபிடிப்புகள் பற்றி 9 வயது குழந்தையுடன் எவ்வாறு தொடர்புகொள்வதென கேட்டதற்கு, பார்டு தவறான தகவலை பதிலளித்தது.
ட்விட்டர் பயனர்களால் இந்த தவறு சுட்டிக்காட்டப்பட்டதை அடுத்து, டெக் வல்லுனர்களும், நெட்டிசன்களும் விமர்சனம் செய்தனர். இதன் எதிரொலியாக கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட்-டின் பங்குகள் புதன்கிழமை வர்த்தக முடிவில் 9 சதவீதம் வரை சரிந்தது.