நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கிக்கு, இந்தியாவில் இருந்து தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் நிவாரணப்பொருட்களுடன் அனுப்பி வைக்கப்பட்டனர். அடுத்தடுத்த நிலநடுக்கங்கள் துருக்கி மற்றும் சிரியாவை புரட்டி போட்டுள்ள நிலையில், இருநாடுகளிலும் 4,300க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில் துருக்கிக்கு உதவும் விதமாக, காசியாபாத் விமானப்படை தளத்தில் இருந்து விமானம் மூலம், 100 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள், மோப்ப நாய் படைகள், மருத்துவ பொருட்கள் மற்றும் பிற உபகரணங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
இதே போல இஸ்ரேல், ஈராக் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்தும் துருக்கி, சிரியாவுக்கு நிவாரணப்பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.