தண்டனைபெற்ற பெண் கைதிகளை ரஷ்யா போரில் ஈடுபடுத்தி வருவதாக உக்ரைன் உளவுத்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், போரில் ஏற்பட்டுள்ள பேரிழப்பைத் தொடர்ந்து ரஷ்யா இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.
இதற்காக நிஷ்னி என்ற நகரத்தில் 50 பெண் கைதிகளை களமிறக்கி உள்ளதாகவும் கூறியுள்ளது. இதேபோல் வீடற்றவர்களையும், ராணுவத்தில் போதிய அனுபவம் இல்லாதவர்களையும் போரில் ஈடுபடுத்தி வருவதாகவும், உக்ரைன் உளவுத்துறையின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே கார்கிவ் நகரில் ரஷ்யா தனது எஸ் 300 ரக ஏவுகணையால் தாக்குதல் நடத்தியதாகவும் உக்ரைன் கூறியுள்ளது.