அமெரிக்காவில் 40 விழுக்காடு விலங்குகள் மற்றும் 34 விழுக்காடு தாவரங்கள் அழியும் அபாயத்தில் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து பாதுகாப்பு ஆராய்ச்சிக் குழுவான NatureServe நடத்திய ஆய்வில், அமெரிக்காவின் அடையாளமாகக் கருதப்படும் crayfish போன்ற நன்னீர் மீன் வகைகள், உயிர் கொல்லி தாவரமான வீனஸ் ப்ளைட்ராப் போன்றவை விரைவில் அழிந்து விடும் அபாயத்தில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலநிலை மாற்றம் உயிரினங்களுக்கு பேராபத்தை ஏற்படுத்துவதாக அதில் கூறப்பட்டுள்ளது.