இந்திய ரூபாயை வர்த்தகத்திற்காக பயன்படுத்துவது இலங்கையின் கடன் மீட்புத் திட்டத்தின் ஒரு பகுதிதான் என்று அந்நாட்டு தூதர் மிலிந்தா மொரகடா விளக்கம் அளித்துள்ளார்.
இந்திய ரூபாயின் மூலமாக இலங்கை தனது வர்த்தகத்தை விரிவுபடுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இலங்கை பொருளாதார நெருக்கடிக்கு ஆளான போது உடனடியாக உதவிக்கரம் நீட்டிய இந்தியா இலங்கை அரசுக்கு 3 புள்ளி 9 பில்லியன் டாலர் நிதியுதவி அளித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கைக்கு வேறு நிதி அமைப்புகளின் நிதி கிடைக்கவும் இந்தியா துணை நின்றதாகவும் அவர் தெரிவித்தார்.