தொழில்நுட்பத் துறையில் சீனாவுக்கு எதிராக இந்தியாவும் அமெரிக்காவும் ஒத்துழைப்பை அதிகரித்துள்ளன.
முக்கியமான தொழில்நுட்பத்துறையின் முன்னேற்றத்தை இந்தியாவுடன் பகிர்ந்துக் கொள்வது தொடர்பான பேச்சுவார்த்தை இந்தியா-அமெரிக்க அதிகாரிகள் இடையே இந்த வாரத்தில் நடைபெற உள்ளது.
கடந்த ஆண்டில் பிரதமர் மோடியும் அதிபர் ஜோ பைடனும் சந்தித்துப் பேசிய பின்னர் இரு நாடுகளுக்கு இடையே பரஸ்பர நட்பும் நம்பிக்கையும் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனால் அணு ஆயுதங்களை தாங்கும் ஏவுகணைகளையும், ஜெட் விமானங்களையும் விண்கலன்களையும் இயக்கப் பயன்படும் முக்கியமான மைக்ரோ சிப்களையும் தொழில்நுட்பத்தையும் இந்தியாவுக்கு அளிக்க அமெரிக்கா முன்வந்துள்ளது.