செவ்வாய், வியாழன் உள்ளிட்ட கிரகங்கள் சுழலும் போது ஒலி ஏற்படுவதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
இதுகுறித்து பிரான்ஸ் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், கிரகங்களில் வெளியாகும் ரேடியோ உமிழ்வுகளை ஒலி அலைகளாக மாற்றி அமைத்தனர்.
அப்போது புதன் கிரகத்தில் நீண்ட காற்று வீசுவது போலவும், வெள்ளி கிரகத்தில் இரும்பை இழைப்பது போன்றும், செவ்வாயில் ஊளைக் காற்று வீசுவது போன்றும் அவ்வப்போது இடி விழுவது போலவும் ஒலி ஏற்பட்டிருந்தது.
வியாழன் கிரகம் நீண்ட பேரிரைச்சல் போன்றும், சனி கிரகம், விமானம் இறங்கும் போது உண்டாகும் இரைச்சல் போன்றும் ஒலி எழுப்பியதைக் கண்டறிந்தனர்.
ரேடியோ உமிழ்வுகளின் படி அனைத்து கிரகங்களும் ஒலியை வெளிப்படுத்தும் தன்மை கொண்டவை என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.