அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டனர்.
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பெவர்லி க்ரெஸ்ட் பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதில், 3 பேர் உயிரிழந்த நிலையில், 4 பேர் காயமடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஒரே மாதத்தில் கலிஃபோர்னியா மாகாணத்தில் நடத்தப்பட்ட நான்காவது துப்பாக்கிச் சூடு சம்பவம் இதுவாகும்.