துருக்கியில், மே 14 ஆம் தேதி, நாடாளுமன்றத் தேர்தலும், அதிபர் தேர்தலும் நடைபெற உள்ளது.
பள்ளி தேர்வுகளை முன்னிட்டு, ஒரு மாதம் முன்கூட்டியே தேர்தல் நடத்தப்பட உள்ளதாக அதிபர் தையீப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.
2003 ஆம் ஆண்டு முதல் பிரதமராகவும், 2014 ஆம் ஆண்டு முதல் அதிபராகவும் பதவி வகித்துவரும் எர்டோகன் மீண்டும் அதிபர் தேர்தலில் களம்காண்கிறார். விலைவாசி உயர்வை முன்னிட்டு மக்கள் மத்தியில் நிலவிவரும் அதிருப்தியால் இந்த தேர்தல் அவருக்கு பெரும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.